உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் மாவட்டத்தில் 164 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 164 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 164 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், மண்டபம், பாம்பன், கீழத்தூவல், கமுதி, அபிராமம், ஆர்.எஸ்.மங்கலம், தேர்போகி, சாயல்குடி, எஸ்.பி.பட்டினம் உள்பட 164 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சிறப்பு வழிபாடு நடந்தது. கிராமிய போட்டிகளின் வென்ற சிறுவர்கள், இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹரே கிருஷ்ணா சத் சங்கம், யாதவர் பண்பாட்டு கழகம், யாதவர் இளைஞர் மன்ற நிர்வாகிகள் செய்தனர். கீழக்கரை: கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் 31ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை 4 மணியளவில் சுதர்ஸன ஹோமம், கிராம தேவதைகள் வழிபாடு நடந்தது. பின்னர் "கோவிந்தா கோஷம் முழங்க 108 பால்குடங்கள் வீதியுலா வந்தது. முன்னதாக மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின் சந்தனகாப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(ஆக.,18) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு, கயிறு இழுக்கும் போட்டி, வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், கண்ணபிரான் அழைப்பு வைபவம், அலங்கார தேரில் உற்சவ மூர்த்தி புறப்பாடு போன்றவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். காஞ்சிரங்குடி: காஞ்சிரங்குடி கிராம கோகுலம் நகரில் கண்ணன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. விளையாட்டுப்போட்டிகள், திருவிளக்குபூஜை, நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !