உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனித நேயம் தழைத்திட வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம்!

மனித நேயம் தழைத்திட வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம்!

நெய்வேலி: நெய்வேலி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 1008 பெண்கள் கஞ்சிக்கலயம் சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு ÷ நர்த்திக் கடன் செலுத்தினர். உலக மக்களிடையே மனித நேயம் தழைக்கவும், மழை வளம் மற்றும் இயற்கை வளம் பெருகிட வேண்டியும்,  என்.எல்.சி., நிறுவனம் செழித்திட வேண்டி நெய்வேலி வட்டம் 12 ல் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையயொட்டி, நெய்வேலி வட்டம் 5 ல் உள்ள ஸ்ரீகதிர்காம வேலவன் கோவிலில் இருந்து புறப்பட்ட கஞ்சி க்கலய ஊர்வலத்திற்கு மாவட்ட தலைமை நிர்வாகிகள் கிருபானந்தன், சண்முகம், செல்வராஜ், சங்கரன், ”ப்ரமணியன் மற்றும் சங்கரலிங்கம்  முன்னிலை வகித்தனர். என்.எல்.சி. ,முதன்மை பொது மேலாளர் கனகாச்சலம் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் 1008 பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து  நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவன், அம்மன், வினாயகர் மற்றும் முருகன் வேடமணிந்த குழந் தைகள் மற்றும்முளைப்பாரி, தீச்சட்டி சுமந்து வந்த பெண் பக்தர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற  தலைவர் சீத்தாலட்சுமி ராஜேந்திரன், செல்வகுமாரி சுவாமிநாதன், அனந்தராமன், வைதேகி வேல்முருகன், தனலட்சுமி மற்றும் ராஜராஜன் உள்ளிட் டோர் செய்திருந்தனர்.

கடலூர் : மழை வேண்டி கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள ஆதிபராதி வழிபாட்டு மன்றம் சார்பில் 33ம் ஆண்டு கஞ்சி கலய ஊர்வலம்  நடந்தது.  மன்றத்தில் துவங்கிய ஊர்வலம் சுப்ராய செட்டித் தெரு, தேரடி தெரு, பிள்ளையார் கோவில் வழியாக மீண்டும் மன்றத்தை வந்தடைந்தது.  இதில், ஏராளமான பெண்கள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்து வந்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !