உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்!

செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்!

விருத்தாசலம்: செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விருத்தாசலம் பெரியார் நகர் டிரைவர் குவார்ட்டர்ஸ் ஆதிசக்தி  விநாயகர், செல்லமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா, கடந்த 8ம் தேதி துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. 12ம் தேதி திருவிளக்கு பூஜை, 15ம் தேதி செடல் உற்சவம், 16ம் தேதி மஞ்சள் நீராட்டு, ஊஞ்சல்  உற்சவம் நடந்தது. நேற்று பத்தாம் நாள் உற்சவமாக காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11:00 மணிக்கு சாகை வார்த்தல்,  இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !