உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ண வெங்கடேச பெருமாள் சன்னதியில் சிறப்பு அபிஷேகம்!

சொர்ண வெங்கடேச பெருமாள் சன்னதியில் சிறப்பு அபிஷேகம்!

கடலூர்: பில்லாலி சொர்ண வெங்கடேச பெருமாள் சன்னதியில் மழை வேண்டிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவந்திபுரம் அடுத்த பில்லாலி  தொட்டியில் உள்ள சுகப்பிரம்ம மகரிக்ஷி அருட்பீடத்தில் சொர்ண வெங்கடேச பெருமாள் சன்னதியில் சுதந்திர தினம், ஆடி வெள்ளியையொட்டி,  மழை வேண்டியும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை சந்திரசேகர குருக்கள், சங்கர நாராயணன்,  சம்பத்குமார், ஸ்ரீராம் முன்னின்று நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !