கடலூர் முத்து மாரியம்மன் கோவிலில் செடல்!
ADDED :4127 days ago
கடலூர்: கடலூர், மஞ்சக்குப்பம் முத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. கடலூர், மஞ்சக்குப்பம் ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 34ம் ஆண்டு ஆடி மாத உற்சவத்தையொட்டி கடந்த 15ம் தேதி கொடியேற்றி காப்பு கட்டுதல், திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை அம்மன், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, பெண்ணை நதியில் இருந்து கரகம் வீதியுலா, பாலவிநாயகர், பாலமுருகன், தட்சணாமூர்த்தி, விஷ்ணு துர்கைக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. மதியம் சாகை வார்த்தல், மாலை செடல் உற்சவம் நடந்தது. இன்று (18ம் தேதி) காலை 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.