உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைவாழியம்மன் கோவிலில் தீ மிதி விழா!

பச்சைவாழியம்மன் கோவிலில் தீ மிதி விழா!

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் பச்சைவாழி அம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. மிராளூர் கிராமத்தில் உள்ள  அக்னிவீரன் மற்றும் பச்சை வாழியம்மன் கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தது. இதில்,  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அர்ச்சனையும் நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு வெள்ளாற்றங்கரையில் சக்தி கரக  அலங்கார பூஜையும், தொடர்ந்து  தீ மிதி திருவிழாவும் நடந்தது.  விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !