மந்தக்கரை கோவிலில் கஞ்சிக்கலய ஊர்வலம்!
ADDED :4127 days ago
சிதம்பரம்: சிதம்பரம் மந்தக்கரை ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவத்தையொட்டி சக்தி கரகம், பால் குடம் ஊர்வலம் நடந்தது. சிதம்பரம் மந்தக்கரை ஆதிபராசக்தி மன்றம் சார்பில் 7ம் ஆண்டு ஆடி மாத உற்சவத்தையொட்டி சக்தி கரக ஊர்வலம் நேற்று நடந்தது. இதனைத் தொடர்ந்து பால்குடம் மற்றும் கஞ்சிக் கலயம் ஏந்தி 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக தெற்கு, வடக்கு, மேற்கு மற்றும் கீழ வீதி வழியாகச் சென்றனர்.