உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீச்சட்டி திருவிழா: பக்தர்கள் பரவசம்!

தீச்சட்டி திருவிழா: பக்தர்கள் பரவசம்!

வில்லிவாக்கம் : வில்லிவாக்கம், தேவி பாலியம்மன் கோவிலில் நடந்த ஆடி திருவிழாவில், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். வில்லிவாக்கம், தேவி பாலியம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழா, கடந்த 23ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீச்சட்டி ஊர்வலம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. அதில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் களை நிறைவேற்றுவதற்காக, தலையில் தீச்சட்டி ஏந்தியபடி, கோவில் குளத்தை சுற்றி, ஆடியபடியே கோவிலுக்கு வந்தனர்.ஏழு அடி நீளமுள்ள வேலை வாயில் குத்தியும், சிலர் வேலை உடல் முழுவதும் குத்தியும், தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தீமிதி திருவிழா, நேற்று இரவு நடந்தது.

மணலியில்...: மணலி, கலைஞர் நகர், கங்கையம்மன் கோவிலில், ஆடி மாதம் ஐந்தாம் வார கூழ்வார்த்தல் மற்றும் 25ம் ஆண்டு திருவிழா, நேற்று நடந்தன.காலையில், கங்கை திரட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பிற்பகலில், கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது.மாலையில், பெண்கள், கோவில் முன் பொங்கல் வைத்து, கும்பம் படையல் போடப்பட்டது. மலர்களால், அலங்கரிக்கப்பட்ட அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !