நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4126 days ago
கும்மிடிப்பூண்டி : கவரைப்பேட்டையில், நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று, சிறப்பாக நடந்தது. கவரைப்பேட்டை உத்திரகுளத்தில் அமைந்து உள்ளது நாகத்தம்மன் கோவில். அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று, கும்பாபிஷேக விழா நடைபெற்றது.யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. புனித நீரை பிரசாதமாக பெற்று செல்ல ஏராளமானபக்தர்கள் கூடியிருந்தனர். அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று மாலை, ஊர் கூடி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.