உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி விழா; குறிச்சியில் கோலாகலம்

கிருஷ்ண ஜெயந்தி விழா; குறிச்சியில் கோலாகலம்

குறிச்சி : கோவை மாநகர் மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது. வி.எச்.பி., அமைப்பின், பொன் விழாவின், ஒரு பகுதியாக கோவை மாநகர் தெற்கு மாவட்ட அமைப்பு சார்பில், நேற்று காலை சுந்தராபுரம், மாரியம்மன் கோவிலில், கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டையுடன் விழா துவங்கியது. மாலை ௫.௧௫ மணியளவில், குறிச்சி பெருமாள் கோவிலிலிருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து, ஊர்வலமாக சென்றனர். கோவை - பொள்ளாச்சி ரோடு வழியாக ஊர்வலம், முத்துமாரியம்மன் கோவிலை, சென்றடைந்தது. வி.எச்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவன் தலைமை வகித்தார். இதையடுத்து, சிறப்பு பூஜையும், குருஜெகனாத சுவாமியின் அருளாசியுரையும் நடந்தன. வி.எச்.பி., மாநில பொருளாளர் ராமமூர்த்தி, மாநகர் மாவட்டத் தலைவர் சிவகுமார், செயலாளர் சிவலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !