புதிய நந்தவனம் அமைத்து பூஜை
ADDED :4126 days ago
கிருஷ்ண ஜெயந்தியொட்டி, சேலம் முதல் அக்ரஹாரத்தில் உள்ள ராகவேந்திரர் கோவிலில், புதிய நந்தவனம் அமைக்கப்பட்டு, கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பிஷேகம் செய்யப்பட்டது. கடந்த, 400 ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் முதல் அக்ரஹாரத்தில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் உள்ள நந்தவனத்தில், கிருஷ்ணர் சிலை இருந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில், நிறைய கட்டிடங்கள் உருவானதாலும், அந்த பகுதி, நகர்மயமாக்கப்பட்டதாலும், நந்தவனம் மாயமானது. தற்போது, மீண்டும் புதிய நந்தவனம் ஏற்படுத்தி, கிருஷ்ணர் சிலை வடிவமைக்கப்பட்டது. நேற்று கிருஷ்ண ஜெயந்தியொட்டி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் தியாகராஜன் புல்லாங்குழல் இசைத்தார். அதன் பின்னர், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.