உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா

கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூர் சந்தான வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி திருவிழா நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு நடந்த உறியடி நிகழ்ச்சியை முன்னாள் சேர்மன் ஜனகராஜ் துவக்கி வைத்தார். முற்பகல் 11:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ம.தி.மு.க., மாநில நிர்வாகி பாபுகோவிந்தராசு, முன்னாள் கவுன்சிலர்கள் செல்வராஜ், தனுசு உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (18ம் தேதி) மாலை 6:00 மணிக்கு வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !