உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூளைக்கு மண் தோண்டிய போது பஞ்சலோக சிலை கண்டெடுப்பு!

சூளைக்கு மண் தோண்டிய போது பஞ்சலோக சிலை கண்டெடுப்பு!

பண்ருட்டி: பண்ருட்டி அருகே செங்கல் சூளைக்கு மண் தோண்டிய போது பஞ்சலோக துர்க்கை அம்மன் சிலை கிடைத்தது. கடலுார் மாவட்டம்,  பண்ருட்டி அடுத்த கரும்பூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது நிலத்தில் வேலு என்பவர் செங்கல் சூளை நடத்தி வந்தார். நேற்று முன்தினம்  சூளைக்காக பொக்லைன்  மூலம் மண் தோண்டினார். அப்போது ஒரு அடி உயரமுள்ள பஞ்சலோக துர்க்கை அம்மன் சிலை,  சிறிய அளவிலான  விநாயகர் சிலை, மணி, நாகம்,  துாப தட்டு போன்றவை கிடைத்தன. தகவலறிந்த அப்பகுதி மக்கள், சிலைகளைப் பார்வையிட்டு, இந்தச் சிலைகள்  அருகில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சொந்தமான சிலை எனக் கூறினர். அதனையடுத்து, அந்தச் சிலைகள் மற்றும் பூஜை  சாமான்களை விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் வைத்து பராமரிக்க ஊராட்சித் தலைவர் சாரங்கபாணி முன்னிலையில் செங்கல்சூளை உரிமைய õளர் வேலு வழங்கினார். இதனையறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று சிலைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !