உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகாலம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா!

ராகாலம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா!

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம், ராகாலம்மன் கோவில், ஆடித் திருவிழாவை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து, தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஒரகடம் அடுத்துள்ளது மேட்டுப்பாளையம். இக்கிராமத்தில், பழமையான ராகாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், புனரமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், தீ மிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி, கடந்த 15ம் தேதி, கணபதி அபிஷேகத்துடன் விழா துவங்கியது. முதல் நாள், கிராமத்தை சேர்ந்தவர்கள் பால்குடம் எடுத்து, பொங்கலிட்டு வழிபட்டனர். பக்தர்கள், தங்கள் உடலில் அலகு குத்தியும், டிராக்டர், ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களை இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இந்நிலையில், காப்புக் கட்டி, விரதம் இருந்த, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று முன்தினம், மாலை 6:00 மணிக்கு மேல், தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவை முன்னிட்டு, இரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை, மேட்டுபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வேலு மற்றும் விழா குழுவினர் இணைந்து செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !