அந்தோணியார் ஆலயத்தில் 25வது ஆண்டு விழா கோலாகலம்!
ADDED :4124 days ago
மதுராந்தகம் : எலப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலயத்தில், 25ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடந்தது. அச்சிறுபாக்கம் அடுத்துள்ள எலப்பாக்கம் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.இக்கோவிலில், 25ம் ஆண்டு திருவிழா, கடந்த, 15ம் தேதி கொடியேற்றம் திருப்பலியுடன் துவங்கியது. மறுநாள் நாள், 16ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நற்கருணை பவனியும், 17ம் தேதி மாலை, 4:00 மணிக்கு ஆடம்பர திருவிழாவும், மாலை, 6:00 மணிக்கு அந்தோணியார் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி செல்லுதலும் வெகு விமர்சையாக நடந்தது. தொடர்ந்து நேற்று, 8:00 மணிக்கு நன்றி திருப்பலியும், காலை, 10:00 மணிக்கு கொடி இறக்குதலும், அதன் பின் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஐநுாறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அந்தோணியாரை வழிபட்டு சென்றனர்.