பாஞ்சஜன்ய பெருமை
ADDED :5298 days ago
மகாபாரத போரின்போது, கிருஷ்ணரிடம் பாஞ்சஜன்யம் என்ற சங்கு இருந்தது. போரின் துவக்கத்திலும், முடிவிலும், பாண்டவப்படைகள் தளரும் போதும் அவர் பாஞ்சஜன்யத்தை ஊதுவார். அப்போது எதிரிகள் அதன் ஓசை கேட்டு நடுங்குவர். பாண்டவப்படையினரோ உற்சாகம் பெறுவர். மற்ற ஆயுதங்களை அவர் கர்ணனின் முன்னால் விஸ்வரூப தரிசனம் எடுத்த போது கையில் வைத்திருந்தார். அதைப் பார்த்தே முக்தியடைந்து விட்டான் கர்ணன். அவை சுதர்சனம் என்னும் சக்கரம், கௌமோதகி என்ற கதாயுதம், நந்தகம் என்ற வாள், சாரங்கம் என்ற வில் ஆகியன.