உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவர்த்தனன்...

கோவர்த்தனன்...

கோகுலத்தின் தலைவரும், கண்ணனின் வளர்ப்புத் தந்தையுமான நந்தகோபர் இந்திரனுக்காக ஆண்டுதோறும் விழா எடுப்பார். அப்போது நாட்டில் செழிப்பாக மழை பெய்து, காடு, கழனி செழித்து பசுக்கள் தடையின்றி பால் தர வேண்டுமென பிரார்த்திப்பார். கோகுலத்து பசுக்கள் அங்குள்ள கோவர்த்தன கிரியை (மலை) சார்ந்து மேய்ந்தன. பகவான் கிருஷ்ணர் கோகுல மக்களிடம், மலை தானே நம் பசுக்களும் பசுமையான புல்லையும், இதர வகை தீனியையும் தருகிறது. எனவே இந்த மலைக்கு பூஜை செய்யுங்கள், என்றார். கண்ணனின் சொல் மீறாத கோபாலர்கள் அப்படியே செய்தனர். இதனால், இந்திரன் கோபப்பட்டான். மழையை அதிகமாக பொழிவித்து கோகுலத்தை வெள்ளக்காடாக்கினான். பயந்துபோன கோகுல மக்கள் கண்ணனைச் சரணடைய, அவர் கோவர்த்தன மலையை தன் கையால் தூக்கி குடையாகப் பிடித்தார். மக்களும், பசுக்களும் அதன்கீழ் நின்று பிழைத்தனர். கண்ணனின் சக்தியை அறிந்த இந்திரன் அவரிடம் மன்னிப்பு கோரினான். அன்று முதல் கண்ணனுக்கு கோவர்த்தனன் என்ற பெயரும் உண்டானது. இதன்பின் கோவர்த்தன மலைக்கு தொடர்ந்து பூஜைகள் செய்து கண்ணன் அருள் பெற்றனர் கோகுலவாசிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !