கொடி மரத்தில் ஆமை!
ADDED :5298 days ago
பெருமாள் கோயில்களில் சுவாமி எதிரிலுள்ள கொடிமரத்தில், கருடாழ்வார் உருவம் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால், நாகர்கோவில் நாகராஜா கோயில் கொடிமரத்தில் கருடாழ்வார் வடிவம் கிடையாது. மாறாக, கொடிமரத்தின் உச்சியில் ஆமை இருக்கிறது. இக்கோயிலில் அனந்தகிருஷ்ணர் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இங்கு நாகராஜாவே பிரதான மூலவர் என்றாலும், அனந்த கிருஷ்ணருக்கே கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கருடர், நாகத்திற்கு எதிரான குணம் கொண்டவர் என்பதால், இங்கு கருடாழ்வார் இல்லை என்கிறார்கள். பாற்கடலில் ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார். இதற்கு கீழே ஆமை இருப்பதாலும், பெருமாளின் கூர்ம அவதாரத்தை நினைவுபடுத்தும் வகையிலும் இங்கு ஆமை அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வதுண்டு.