கஞ்சிக் கலயம் ஊர்வலம்!
ADDED :4122 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அள்ளூரில் நடந்த கஞ்சிக் கலயம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சேத்தியாத்தோப்பு அள்ளூரில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள ஓம்சக்தி கோவிலில் சிறப்பு அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து, கஞ்சிக் கலயங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து அள்ளூர் மெயின் ரோடு வழியாக வார வழிபாட்டு மன்றச் செயலர் உத்திராபதி தலைமையில் கஞ்சிக் கலயம் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் 2,000க்கும் மேற்பட்ட செவ்வாடைத் தொண்டர்கள் கஞ்சிக் கலயம் சுமந்து வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.