உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிக்கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்

காஞ்சிக்கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்

பெருந்துறை: பெருந்துறை, ஓம் குடில் ஆன்மிகம் மற்றும் சமூக சேவை அமைப்பு சார்பில், பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில்,அன்னபூரணி அம்மன் உடனமர் திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது. 102 வயது உள்ளூர் பெரியவர் ராமசாமிகவுண்டர் முன்னிலை வகித்தார். விஜயமங்கலம் புலவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வேலுசாமி வரவேற்றார். தாரமங்கலம் அரிகர தேசிகர் மற்றும் தமிழ் திருமுறை ஓதுவார் மூர்த்திகள், வயலின் மற்றும் மிருதங்கம் இசையுடன், "தமிழ் இசை தேன் அமுதம் என்ற பெயரில், திருவாசகம் பாடல்களை இசையோடு பாடினார்கள். அவர்களுடன் இணைந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் பாடினார்கள். விழா நினைவாக, நாகலிங்கம் மரக்கன்று நடப்பட்டது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !