உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோகுலாஷ்டமி தேர்த் திருவிழா

கோகுலாஷ்டமி தேர்த் திருவிழா

நங்கவள்ளி: தாரமங்கலம் அருகே, சென்றாயப் பெருமாள் கோவிலில், கோகுலாஷ்டமி திருத்தேர்விழா, உறியடி உற்சவ விழா நடந்தது. தாரமங்கலம் அருகே, மல்லிக்குட்டையில், சென்றாயப் பெருமாள் கோவில் உள்ளது. கோகுலாஷ்டமியை முன்னிட்டு, தேர்த்திருவிழா மற்றும் உறியடி உற்சவ விழா, நேற்று மாலை, 5 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ சென்றாயப் பெருமாள் ஒரு தேரிலும், விநாயகர் மற்றொரு தேரிலும், அலங்கரிக்கப்பட்ட மகமேறுவில் மாரியம்மனும் உலா வந்தது. மேலும், உறியடி உற்சவமும், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், வருவாய்த்துறை இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !