காணியம்மன் கோவில் விழா
ADDED :4122 days ago
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில் உள்ள காணியம்மன் கோவில் திருவிழா இன்று நடக்கிறது. பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில் உள்ள காணியம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி முதல் புதன்கிழமை நடப்பது வழக்கம். இதேபோல் இந்தாண்டும் கோவில் தேர் திருவிழா நடக்கிறது. இதில் அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன், பழனியப்பன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, பள்ளிப்பட்டி, புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, பாப்பாம்பாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் செய்துள்ளனர்.