ஓடைகால் செல்லியம்மன் கோவிலில் திருவிழா!
ADDED :4072 days ago
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் ஓடைகால் செல்லியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது.திருக்கழுக்குன்றம் வெள்ளாளத் தெருவில் வயல்வெளிப் பகுதியில் ஓடைகால் செல்லியம்மன் கோவில் அமைந்துஉள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி மூன்று நாட்களும் கரக ஊர்வலம் நடந்தது.நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில், சுற்று வட்டார மக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.