வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4072 days ago
ஊத்துக்கோட்டை : வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஊத்துக்கோட்டை அடுத்த, அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ளது ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில். இக்கோவிலில், நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த, 18ம் தேதி காலை, கணபதி பூஜை, நவக்கிர ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜையும், மறுநாள், 19ம் தேதி விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று, காலை, 10:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 8:00 மணிக்கு ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி திருப்படம் அலங்கரித்து முக்கிய வீதிகள் வழயாக வலம் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.