பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்!
ADDED :4070 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பெருமாள் கோவிலில் நேற்று உறியடி உற்சவம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் ஜனகவல்லிதாயார் சமேத வைகுண்டவாசகப்பெருமாள் கோவிலில் நேற்று உறியடி உற்சவம் நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு ஸ்வர்ணகவசம் அணிவித்து கோவிலின் வாசலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறியடி உற்சவம் நடந்தது. பின், சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை அகோபிலமட நிர்வாகிகள் மற்றும் பாஸ்கர் பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.