ராஜகணபதி கோவில் உண்டியல் மூலம் ரூ.10.41 லட்சம் வருவாய்!
சேலம்: சேலம், ராஜகணபதி கோவில் உண்டியல் மூலம், 10.41 லட்சம் ரூபாய், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சி வருவாயாக கிடைத்துள்ளது. சேலம், ராஜகணபதி கோவில் உண்டியல், நேற்று சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் சுய உதவிக்குழுவை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனர். ராஜகணபதி கோவில் உண்டியலில், 10,41,173 ரூபாய் பணமாகவும், மூன்று கிராம் தங்கம், 61 கிராம் வெள்ளி, அமெரிக்க டாலர் 100, ரியால் 104, மலேசியன்- ரிங் மூன்று, சிங்கப்பூர் டாலர் இரண்டு ஆகியன வருவாயாக கிடைத்தது. தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோவிலின் உண்டியல் எண்ணப்பட்டது. இதில், 30,323 ரூபாய் ரொக்க பணம் மட்டும் வருவாயாக கிடைத்தது. ஆக.,29ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாப்படுவதை முன்னிட்டு, ராஜகணபதி கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. விநாயகர் சதுர்த்திக்கு பின்னர் எண்ணப்படும் நிலையில் கோவிலின் உண்டியல் வருவாயில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.