தஞ்சாவூர் உறியடி உற்சவம்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அடுத்த வரகூர் வெங்கடேசபெருமாள் கோவிலில், கடந்த, 11ம் தேதி உறியடி விழா துவங்கியது.இதில், வெங்கடேசபெருமாள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் பல்லக்கில் கடுங்கால் நதிக்கரையில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை, சிவனுக்குரிய ருத்ர ஜபத்துடன் திருமஞ்சனம் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, 2 மணிக்கு வெள்ளி கேடயத்தில் சிறப்பான புஷ்ப, ஆபரண அலங்காரங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசபெருமாள் புறப்பாடு துவங்கியது. அதில், 131 பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து, ஸ்வாமியை பின் தொடர்ந்தனர். பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து பிரார்த்தனை நிறைவேற்றினர். உறியடித்தலில் சூரியநாராயணன் மகன் சதீஷ் உறியை எட்டி பிடித்தார். வழுக்கு மரம் ஏறுதலில் ஜெயராமன், 27 அடி உயரமுள்ள வழுக்குமரத்தில் ஏறினார். தொடர்ந்து, கோவிலுக்குள் சப்தபிரதட்சணம், திருவந்திகாப்பு, கோணங்கிஉரையாடல் ஏகாந்தசேவை, தீபாராதனைகள் நடந்தன.