குளித்தலை ஆன்மிக ஊர்வலம்!
குளித்தலை: குளித்தலை அடுத்த கீழகுட்டப் பட்டி, மேல்வருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில், உலக நன்மைக்காக, 7ம் ஆண்டாக கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம் நடந்தது. கரூர் மாவட்டம், கீழகுட்டப்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பஞ்., யூனியன் அலுவலகம், எம்.ஜி.ஆர்., சிலை, நால்ரோடு, கோட்டமேடு பள்ளி வழியாக மீண்டும் மன்றத்தை வந்தடைந்தது. இதில், நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகள் விரதம் இருந்து அக்னி சட்டி ஏந்தியும், கஞ்சி கலயம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சிக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாக குழு மாவட்ட தலைவர் ஜெச்சந்திரன், யூனியன் குழுத்தலைவர் நளினி கலைமணி தலைமை வகித்தனர். பஞ்., தலைவர் கோபால், சிறப்பு வழிபாட்டை தொடக்கி வைத்தார். ஆன்மீக கஞ்சிகலய ஊர்வலத்தை டாக்டர் குரு பிரகாஷ், விஜயலெட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.