வடமதுரை ஆண்டு வருடாபிஷேக விழா!
ADDED :4120 days ago
வடமதுரை : வடமதுரை மேற்கு ரத வீதியிலுள்ள, சித்தி முத்தி விநாயகர் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.நேற்றுமுன்தினம் வாஸ்து பூஜையுடன் துவங்கிய விழாவில், கள்ளியடி பிரம்மா மடத்தில் இருந்து காவிரி தீர்த்தம் ஊர்வலமாக மங்கம்மாள் கேணி விநாயகர் கோயில் வழியே கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. நேற்று காலை சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனை, சுவாமி நகர்வலம், அன்னதானம் நடந்தது. ஏற்பாட்டினை சித்தி முத்தி விநாயகர் சேவை அறக்கட்டளை மற்றும் சங்கடஹர சதுர்த்தி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.