உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: தங்க சப்பரத்தில் சண்முகர்!

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: தங்க சப்பரத்தில் சண்முகர்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழாவில், நேற்று சண்முகர், சிவப்பு சாத்தி, தங்கசப்பரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா நடந்து வருகிறது. நேற்று காலை, 5:00 மணிக்கு, சண்முகருக்கு உருகுசட்ட சேவை நடந்தது. மாலை, 4:30 மணிக்கு சண்முகர் தங்க சப்பரத்தில், சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று, எட்டாம் நாள் திருவிழாவில் காலை, சண்முகர் வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !