புதுச்சேரி சுந்தரேசர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4063 days ago
புதுச்சேரி: கோரிமேடு திருநகர் சுந்தரேசர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோரிமேடு திருநகர் அங்ைகயற்கண்ணி உடனுறை சுந்தரேசர் கோவில் 9ம் ஆண்டு விழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், கலச பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மிருத்துஞ்சய ஹோமம் நடந்தது. மாலை 6:௦௦ மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. சுந்தரேசர்-அங்ைகயற்கண்ணி மனக்கோலத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, திருக்கண்டீஸ்வரர் இசை திருக்கூட்டத்தினர் சிவ பேரிகை, நடராஜன் மற்றும் ராஜன் குழுவினரின் சர்வ சாதகம், அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் பேராசிரியர் இளங்கோ, கயிலைமணி, சித்தாந்த ரத்தினம், பாலையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.