ஆற்றங்கரை சித்தி விநாயகர் வீதியுலா!
ADDED :4196 days ago
விருத்தாசலம்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஆற்றங்கரை சித்தி விநாயகர் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு விசேஷ வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் முதல் நாள் உற்சவமாக சூரிய பிரபை வாகனத்தில் சித்தி விநாயகர் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.