உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு!

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு!

விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பிகை,  பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர்,  தாயார், சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள்  போன்ற 12 சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !