விநாயகர் சிலைகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு!
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தயாராகும் விநாயகர் சிலைகளுக்கு, வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு, 1௫ ஆயிரம் சிலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்கள், விநாயகர் சதுர்த்தியை, அங்கேயே கொண்டாடி மகிழ்கின்றனர். இதற்காக, பெங்களூருவில் இருந்து விநாயகர் சிலைகளை வாங்குகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பெங்களூருவிலிருந்து விநாயகர் சிலைகளை வரவழைத்து பூஜிக்கின்றனர். இந்த ஆண்டும், ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. துவக்கத்தில் நுாறு, இருநுாறு சிலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது, ஆயிரக்கணக்கான சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பண்டிகைக்கு, ஒரு மாதம் அல்லது 15 நாட்களுக்கு முன், சிலைகள் அனுப்பப்படுகின்றன.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, களி மண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, வெளிநாடுகளில் விரும்புகின்றனர். ஏற்றுமதியாகும் சிலைகளில் பெரும்பாலானவை, வண்ணம் பூசாமல், 10 அங்குலத்துக்கு உட்பட்ட உயரமுள்ளவை. வெளிநாடுகளில், பொது இடங்களில் விநாயகரை அமர்த்துவதில்லை. வீடுகளில், சிறியளவில் விநாயகரை வைத்து வழிபடுகின்றனர். பெங்களூருவில், விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்யும், ௧௫௦க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் இருந்து, 15 ஆயிரம் விநாயகர் சிலைகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்தும், விநாயகர் சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.