சுந்தரராஜ பெருமாளுக்கு பவித்ர உற்சவம்!
ADDED :4062 days ago
ஆர்.கே.பேட்டை: சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று, பவித்ர உற்சவம் நடந்தது. ஆர்.கே.பேட்டை, சுந் தரராஜ பெருமாள் கோவிலில், பவித்ர உற்சவம், கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. அன்று மாலை, மேதினி பூஜை, சால சுத்தி வாஸ்து செய்யப் பட்டது. நேற்று முன்தினம் காலை, ஸ்தாபன திருமஞ்சனம், பவித்ர பிரதிஷ்டை நடந்தது. நேற்று, காலை 9:00 மணிக்கு, சுந்தரராஜ பெருமாளுக்கு தி ருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து, திருவாராதனமும், மாலை 6:00 மணிக்கு, மகாபூர்ணஹூதி, பத்ம பிரதஷணம் நடந்தது. 7:00 மணியளவில், சுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் உலா எழுந்தருளினார். இரவு 10:00 மணிக்கு, ஏகாந்த சேவையுடன் உற்சவம் நிறைவடைந்தது.