மகாலட்சுமி கோவிலில் சிறப்பு பூஜை துவக்கம்!
ADDED :4062 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அனுப்பர்பாளையம் மகாலட்சுமி கோவிலில் நேற்று முதல் சிறப்பு பூஜைகள் துவங்கி நடந்து வருகின்றன. இதில் நேற்று காலை 7.00 மணிக்கு சூரியநமஸ்காரம், யஜூர் வேத பாராயணமும்,நடந்தது. இன்று காலை 7.00 மணிக்கு கவுரி பூஜை, சதுர்வேத பாராயணமும், நாளை சுப்பிரமணிய புஜங்கம், அருண பாராயணமும் நடக்கிறது. நாளை மறுநாள் லட்சுமி நாராயண பூஜை, லட்சுமி சகஸ்ரநாம பாராயணமும், 28ம் தேதி பஞ்சலிங்க பூஜை, பஞ்ச ருத்ர பாராயணமும், 29ம் தேதி ஸ்ரீசூக்த மகாலட்சுமி வேதேக்த பூஜையும், 30ம் தேதி லட்சுமிநாராயண ஹிருதய பூஜையும், 31ம் தேதி நவக்கிரக பாராயண பூஜையும் நடக்க உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்று பலன் பெறலாம் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.