பொறையாத்தம்மன் கோவில் தேர் திருவிழா!
ADDED :4062 days ago
புதுச்சேரி : உப்பளம் தமிழ்தாய் நகர் பொறையாத்தம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. உப்பளம் தமிழ்தாய் நகர் பொறையாத்தம்மன் கோவில் பிரம்மோற்சம் கடந்த 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 16ம் தேதி கொடியேற்றமும், கூழ்வார்த்தலும் நடந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு, தேர் திருவிழா நடந்தது. முதல்வர் ரங்கசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, அன்பழகன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.