தந்தை ஆனாலும் தயக்கமில்லை!
ADDED :4453 days ago
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் முதல் பூஜை விநாயகருக்குரியது என்பது எல்லா தெய்வங்களும் சேர்ந்து எடுத்த தீர்மானம் தான். ஆனால், இதை மறந்தால் என்ன ஆகும் என்பதை உணர்த்த ஒரு சம்பவம் நடந்தது. சிவபெருமானின் திரிபுர சம்ஹாரத்திற்காக தேவர்கள் தேர் ஒன்றினைச் செய்தனர். தேர் செய்யும் பணியைத் தொடங்கும் போது விநாயகருக்பூஜை செய்ய மறந்தனர். தேர்ப்பணி முடிந்ததும் சிவன் அசுர வதத்திற்காக புறப்பட்டார். உலகாளும் சிவன் தேரில் புறப்பட்டாலும், முதல்கடவுளான விநாயகரை பூஜிக்க மறந்ததால், அதற்குரிய சோதனையை வழங்க விநாயகர் தயங்கவில்லை. தேரின் அச்சு முறியும் படி செய்தார். இந்த தடைக்காரணம் விநாயக பூஜை செய்யாததே என்பதை அறிந்த சிவன் பூஜையை முடித்து போருக்குப் புறப்பட்டார். அசுரர்களை அழித்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை விநாயகர் நிரூபித்துக் காட்டினார்.