உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில் சாக்கடை கழிவுநீர்!

ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில் சாக்கடை கழிவுநீர்!

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் 16 கால் மண்டபம் அருகில், கழிவுநீர் சாக்கடை, தெருவில் செல்வதால், கோவிலுக்கு வரும்  பக்தர்கள் மூக்கை பிடித்து செல்ல வேண்டியுள்ளது. காஞ்சிபுரத்தில் முக்கிய கோவில்களில் ஒன்றாக ஏகாம்பரநாதர் கோவில் விளங்கி வருகிறது. இக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளி மாநில, வெளிநாட்டு யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். இந்த சன்னிதி தெருவில்  அவ்வப்போது பாதாள சாக்கடை கழிவு நீர் செல்வதால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், பகுதிவாசிகளும் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்து செல்லும்  நிலை ஏற்படுகிறது. வழிபாட்டு தலம் அருகில் இதுபோன்ற சுகாதார கேடு விளைவிக்க கூடிய கழிவுநீர் செல்வதை தடுக்க, நகராட்சி நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், சுத்தமாக இருக்கும் இடத்தை பொறுத்துத்தான் அந்த  இடத்திற்கு மரியாதை கூடுகிறது. புனிதமாக விளங்கக் கூடிய கோவில் அருகில் கால்வைக்க முடியாத நிலை உள்ளது. சில குடியிருப்பு வீடுகளில் இ ருந்து வெளியேறும் கழிவுநீர், தெருவிற்கு வராதபடி பார்த்து கொள்ள வேண்டும். நகராட்சி அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !