உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குயவர்பாளையத்தில் ஊஞ்சல் உற்சவம்!

குயவர்பாளையத்தில் ஊஞ்சல் உற்சவம்!

புதுச்சேரி: குயவர்பாளையம் வணிக வைசிய ஹரிஹர பஜனை மடத்தில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. குயவர்பாளையம் வணிக வைசிய ஹரிஹர   பஜனை மடத்தில், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் சுவாமி பிரதிஷ்டை விழா கடந்த 17 ம்தேதி துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்   நடந்தது. 23ம் தேதி நடந்த உறியடி உற்சவத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். விழா நிறைவு நாளான நேற்றுமுன்தினம்   இரவு 6:௦௦ மணிக்கு, சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பஜனை மட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !