உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!

பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி  கோவிலில் ஆவணி அமாவாசையையொட்டி   நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது.  கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள்   தலைமையில் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற கோரி வெற்றிலையில் எழுதி யாக   குண்டத்தில் கொட்டினர். பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.  உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலுõர்  பகுதிகளில் இ  ருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !