உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்

விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்

ராஜபாளையம்: ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர்கோயில் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், விநாயகர் சதுர்த்திவிழா துவங்கியது. நகராட்சி தலைவர் தனலட்சுமி குத்துவிளக்கேற்றினார். மாணவர்களுக்கு நோட்டுகள், பெண்களுக்கு தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன. தொழிலதிபர் குவைத் ராஜா உடபட பலர் கலந்துகொண்டனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசுகையில், ""எளிமையானது விநாயகர் வழிபாடு. மஞ்சள், சாணம் போன்றவற்றை பிடித்து வைத்தால் விநாயகர் வந்துவிடுவார். அவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தாலே போதும். தமிழ் கடவுள் விநாயகர் என்பதால், ஒளவையாரே, "சங்கத் தமிழ் மூன்றும் தா என வேண்டினார், என்றார். உலக நன்மை, மழை வேண்டி, செந்தமிழ் மந்திர சிவயோக வேள்வியை சிவனடியார் மோகன சுந்தரம் நடத்தினார். ஏற்பாடுகளை, மாப்பிள்ளை விநாயகர்கோயில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !