உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குச்சிசாமி சித்தர் 3ம் ஆண்டு குரு பூஜை!

குச்சிசாமி சித்தர் 3ம் ஆண்டு குரு பூஜை!

திண்டுக்கல் : குச்சிசாமி சித்தர் கோவிலில், 3ம் ஆண்டு குருபூஜை, நாளை நடக்கிறது. திண்டுக்கல், வேடசந்துார் அருகே, தோப்புப்பட்டியில் குச்சிசாமி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அவரது உருவப்படத்துடன், சிறிய அளவில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இவர், 18 சித்தர்களில் கொங்கணரின் வழி வந்தவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவரது 3ம் ஆண்டு குரு பூஜை நாளை அதிகாலை 4:30 மணிக்கு, இரண்டாம் கால வேள்வியுடன் துவங்குகிறது. அதையொட்டி, பூர்ணாஹுதி தீபாராதனை நடந்து, பிரசாதம் வழங்கப்படுகிறது. காலை 8:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !