உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்கனி விநாயகருக்கு ஆக.29ல் கும்பாபிஷேகம்

நெல்லிக்கனி விநாயகருக்கு ஆக.29ல் கும்பாபிஷேகம்

மதுரை: மதுரை திருமோகூர் பி.கே.ரெசிடென்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நெல்லிக்கனி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஆக.29ல் நடக்கிறது. விழாவை ஒட்டி, நாளை காலை 8.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், கணபதி ஹோமம், கோபூஜை, லட்சுமி ஹோமம் நடக்கிறது. மாலை 6.00மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ரக்ஷா பந்தனம், கலாகர்ஷணம், முதல்கால யாகசாலை, தீபாராதனை நடக்கும். இரவு 9க்கு யந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தனம் நடக்கிறது.ஆக. 29 விநாயகர் சதுர்த்தியன்று காலை 5.00மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 6.00 மணிக்கு மகாகும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.கோயில் நிர்மாணப் பணியை வெங்கடேஸ்வரன் ஸ்தபதி செய்துள்ளார். கும்பாபிஷேகத்தை கைலாசநாத பட்டர் நடத்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !