சாமித்தோப்பில் 100-வது நாள் தவவேள்வி!
ADDED :4071 days ago
நாகர்கோவில் : சாமித்தோப்பு அன்புவனத்தில் அய்யா தைவகுண்டர் தவவேள்வி நடைபெற்று வருகிறது. அதன் 100-வது நாள் விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாதிபதி அடிகள் தலைமை வகித்தார். பேராசிரியர் தர்மரஜினி வரவேற்றார். பிள்ளையாளர் கல்லூரி செயலாளர் ராஜன் பரிசுகள் வழங்கி பேசினார். விழாவில் மனிதகுலமேன்மை, விவசாய மேன்மைக்கான வேண்டுதல்கள் நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.