உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பில்லாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா!

பில்லாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா!

காளையார்கோவில் : சேதாம்பல் பில்லாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பணிகள் முடிந்தது கும்பாபிஷேக விழா ஆக,25 ம் தேதி அனுக்ஞை,விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கியது. கணேசக்குருக்கள் குழுவினர் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலபூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், 9.30 க்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடும், 9.50 மணிக்கு ராஜ கோபுர கலசத்திலும், பில்லாருடைய அய்யனார், பூரணபுஷ்கலாதேவி, விநாயகர், காளியம்மன், கருப்பர், சோனை கருப்பர், ஒய்யம்மை, சந்தம்மை, முனிஸ்வரர், அப்பாண்டவர் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றினர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !