வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு பூஜை!
ADDED :4065 days ago
கூடலூர் : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா, நேற்று மாலை கொண்டாடப்பட்டது. இதற்காக, அங்குள்ள 22 வளர்ப்பு யானைகள், அலங்கரிக்கப்பட்டன. பின் அவை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, கோவில் முன் வரிசையாக நிறுத்தப்பட்டன. பின்பு, கோவிலில், விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டது. வளர்ப்பு யானைகள் பொம்மன், மசினி கோவில் முன் நின்று மணியடித்து, விநாயகருக்கு பூஜை செய்தன. பின்பு, கோவிலை 3 முறை வலம் வந்து விநாயகரை வணங்கின. அப்போது, வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த யானைகள், தும்பிக்கையை தூக்கி பிளிறியப்படி விநாயகரை வணங்கின.