உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அண்ணாமலையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா!

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், 925 இடத்தில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 925 இடங்களில், விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. திருவண்ணாமலை இரட்டை பிள்ளையார் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து தங்க கவசம் சாத்தப்பட்டன. மேலும், திருவண்ணாமலையில் அக்னி தீர்த்தகுளத்தின் அருகே, 21 அடி உயரத்தில், மூன்று தலை கொண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டின்போது, கொழுக்கட்டை, கொண்டைக்கடலை, சுண்டல், பழ வகைகள், அருகம்புல் மாலை, எருக்கன் பூ மாலை, என, விதவிதமான மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தும் போது, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !