உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுபுக்குளி கூத்தாயி அம்மன்கோயில் கும்பாபிஷேகம்

சிறுபுக்குளி கூத்தாயி அம்மன்கோயில் கும்பாபிஷேகம்

இளையான்குடி: இளையான்குடி அருகே, சிறுபுக்குளி கூத்தாயி அம்மன், கோகுல கிருஷ்ணர் கோயிலில், நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இங்கு, திருப்பணி வேலைகள் முடிந்து கும்பாபிஷேக பூஜைகள், நேற்று காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று காலை 9 மணிக்கு, 2ம் யாகசாலை பூஜை, மாலை 6 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். நாளை (ஆக.31) காலை 8மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 10:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். கிராமத்தினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !