உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அழகியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் : காவித்தண்டலம் கிராமத்தில் உள்ள, அழகியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காவித்தண்டலம் கிராமத்தில், 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, அழகியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி, சிதிலமடைந்து இருந்தது.இதையடுத்து, அழகியம்மன் கோவில் நற்பணி மன்ற குழுவினர் மற்றும் அப்பகுதி கிராமவாசிகள் சார்பில், கோவிலை புனரமைக்க தீர்மானித்தனர். அதன்படி, சில மாதங்களுக்கு முன்பாக, கோவில் சீரமைப்பு பணி துவங்கி தற்போது பணி முடிவடைந்த நிலையில், நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, முன்னதாக, கடந்த 29ம் தேதி, கொடியேற்றல் நிகழ்ச்சியும்; அதையடுத்து, 30ம் தேதி, விக்னேஸ்வரா பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், பிரவேச பலி, கலஸ்தாமனம் மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !